ஆசிரியை திருமதி. பத்மா சந்தானம் எம். ஏ அறிமுகம்



நான் சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டமும், மாநிலக் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றேன்.

நான் ஆசு கவியில்லை. எனக்குத் தொழில் கவிதையுமில்லை. சிறுவயதிலிருந்தே அவ்வப்பொழுது கவிதைகள் எழுதியிருந்தாலும், மாநிலக்கல்லூரியில் முதுகலைவகுப்பு மாணவியாக இருந்த போது, மனை மாண்பு என்ற கவிதைக்கு இரண்டாம் பரிசும், கார்த்திகை தீபம் பற்றிய கவிதையை அகில இந்திய வானொலியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்ததுதான் என் கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரம்.

கோவை மாநிலக் கவிமன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசும், இரண்டாம் பரிசும் அடுத்தடுத்த மாதங்களiல் கிடைத்தன.

பல கவிதைகள் பாவையர் பாமாலை, முல்லைச் சரம், வசந்த வாசல், கவிதைத் தோரணம், கவிக்கோலம், கவிமாலை, கவிதை உறவு, கீழை நாட்டுக் கவிதை மஞ்சரி போன்ற தொகுப்பு நூல்களால் இடம் பெற்றதாலும், என் உள்ளம் நிறைவு பெற்றது. பக்திப் பாடல்கள் எழுதத் தொடங்கிய பிறகுதான். நாராயணனின் 108 திவ்ய தேசங்களைப் போற்றிப் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

என் வாழ்க்கையின் மிக பொன்னான நாட்களேயாம். இந்நூலை எழுதி வெளியிட வைத்த ஸ்ரீமந் நாராயணனுக்கு என் பணிவான நன்றியைத் தெரிவித்தால் தான் என் பிறவியும் பயன் பெறும். நான் பெற்ற இன்பம் மற்றவரும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், இந்நூலை வெளியிடுகிறேன். குறை இருப்பின் மன்னித்தருள வேண்டுகிறேன்.

திருமதி. பத்மா சந்தானம் எம்.ஏ.

0 comments:

Post a Comment

நாராயணனை தேடி

ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாசாய மஹா தேசிகாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஈ ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ கோமள வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ அபர்யாப்தாம்ருத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ ரங்கநாயிகா ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீநிவாஸ பரப்ரம்மணே நம: