1. விண்ணரங்கம் | ராகமாலிகை | சுத்தசாவேர | ஆதி



மண்ணில் ஒளி ருதே விண்ணரங்கம்
மாந்தர் போற்றிடும் பொன்னரங்கம்.
கண்ணில் தெரியுதே ஒரு சுவர்க்கம்
காவிரிபாயும் திருவரங்கம்.

ஹிந்தோளம்

விண்ணளாவிய கோபுரம்
வெண்முகிலில்ஆடும் பொன்கலசம்.
வண்ண மாடத்து அரங்கன் நாமம்
வாவென்றழைக்கும் ஸ்ரீ ரங்கம்

சிந்து பைரவி

வண்டார் பொழில் சூழெழில் அரங்கம்
அண்டர்கோன் அமரும் பூவரங்கம்.
தண்துழாய் மார்பனைத் தொழுது பாடி.
அரையர் ஆடும் அணியரங்கம்

பாகேஸ்ரீ

அண்ணல் ராமனின் கம்பன் காவியம்
அரங்கேற்றப் புகழ் கவியரங்கம்.
நான்கு வேதமும் திவ்யப் பிரபந்தமும்,
நாளும் ஓதிடும் அருட்சுரங்கம்.

சுருட்டி

கண்மூடி நாகம் தனில் துயிலும்
கண்ணனைப் பாடிய கோதையும்,
வண்ணப் பூமாலை சூடியும் சூட்டியும்
அரங்கனை மணந்த மணவரங்கம்.

ரேவதி.

விண்ணிலே மோட்சம் தேடும் அன்பர்க்கு,
எண்ணிலா ஊழித்தவம செய்தாற்போல்,
பண்ணிய பாவம் அறவே தொலைக்கும்.
பூலோக வைகுந்தம் தென்னரங்கம்
காவிரி பாயு ம் புனலரங்கம் வ.aவென் றழைக்கும்
ஸ்ரீரங்கம்,ஸ்ரீfரங்கம், ஸ்ரீரங்கம்..
Share:

2. உறையூர் கல்யாணி | (இரட்டைக் களை) | ஆதி




பல்லவி

உழுபடைச் சாலின்கீழ் மிதிலைச் செல்வியும்
துழாய்ச் செடியின் கீழ் பாவைச் செல்வியும்,
அழகிய மணவாளனை மணக்கவே
தாமரையில் பிறந்தாள் உறையூர்ச் செல்வியே. (உழுபடை)

அனுபல்லவி

அழியா அமரரும் தேவியருடனே
ஆடல்பாடலுடன் உறைந்த உறையூரே.
கோழியும் இறையருள் பெற்று யானையை
விரட்டித் துரத்தியதும் கோழியூரே. (உழுபடை)

சரணம்

ஆழ்வாரில் பாணரும் எழிலரங்கனின்
ஸ்ரீ வத்ச அம்சமாய்ப்பிறந்த ஊரே.
ஆழி சங்கேந்தும் கூடலழகனே,
கடல்வண்ணனாம் உறையூரானே.
அழகிய மணவாளன் அரங்கனையே
கமலவல்லியும் மணந்ததது கண்டு
எழிலுடை அரங்க நாயகியும்
ஊடல் ஊசலும் செய்கின்$ரே. (உழு படை)

Share:

3. தஞ்சை மாமணிக் கோவில் | லலிதா | ஆதி




பல்லவி

நெஞ்சினில் நினைத்தாலே இனித்திடும் தேவனே
தஞ்சை மாமணிக் கூட நீலமேகமே (நெஞ்சினில்)

அனுபல்லவி

செஞ்சுடர் ஆழியானே செங்கமல வல்லி நாதனே.
தஞ்சை மாமணியாய் நின்ற காவல்தெய்வமே. (நெஞ்சினில்)

சரணம் 1

தஞ்சகன் தண்டகன் தாரகன் மூவரின்
வஞ்சகம் அழிந்திட மூவராய் வந்தாய்.
தஞ்சகன் சரணடைய தஞ்சாவூர் பிறந்ததே.
அஞ்சிய தாருகனழிய மணிக்குன்றம் வந்ததே ((நெஞ்சினில்)

சுரணம்2

வெஞ்சின அரவம் தனில் துயில்கின்ற மாதவனே.
அஞ்சிறைப் புள்ளும் ஊர்ந்திடும் மாலவனே.
அஞ்சேலென்றெனை ஆட்கொள்ளும் தூயவனே.
மஞ்சுசூழ் வெண்ணாற்றங்கரை வாழும் நாயகனே
(நெஞ்சினில் )
Share:

4. திருஅன்பில் | தர்பாரி கானடா | ஆதி | (இரட்டைக்களை)

Thiruanbil



பல்லவி

அழகிய நம்பியுடன் சேர்ந்தருளும் திருவடி அழகிய நம்பி ஸ்ரீ
கழல்பணிந்தோர்க்கு அன்பேயுருவாய்க் காட்சி தருகின்ற
நம்பி ஸ்ரீ அழகிய))

அனுபல்லவி

செழுந்தவத்தோன் பிருகுமுனியும் அறிந்த சத்துவ குண
மூர்த்தி  ஸ்ரீ
அழகிய பாமபணையில அரதுiலும் புஜங்கசயன
மூர்த்தி  ஸ்ரீ (அழகிய)

சரணம்

சுழன்றோடும்  காவிரி பல்குனி சாவித்திரி நதிகளும் கூடும்.
எழில்மிகு தக்ஷிண கயையெனும் பெயரே பெறுகின்ற
புண்ணிய Eக்ஷத்திரம்.

ஆழிப்பிரானும் மழுவேந்தியவனும் சேர்ந்து பெருமை தரும்
பாணபுரம்.

ஆழிநெடுமால் சுந்தரராஜனைச் சம்பந்தர் பாடிய
அன்பில் திருத்தலம். (அழகிய)
Share:

நாராயணனை தேடி

ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாசாய மஹா தேசிகாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஈ ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ கோமள வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ அபர்யாப்தாம்ருத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ ரங்கநாயிகா ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீநிவாஸ பரப்ரம்மணே நம: